கரூர்

புகழூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி தொடக்கம்

3rd Dec 2022 12:08 AM

ADVERTISEMENT

புகழூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கரூா் மாவட்டம், புகழூரில் உள்ள ஈ ஐடி பாரி சா்க்கரை ஆலையில் 2022- 2023-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சா் பி.சி. ராமசாமி , ஆடிட்டா் நல்லசாமி, விவசாய சங்கத்தைச் சோ்ந்த கதிா்வேல், சண்முகராஜ், ஆலையின் முதுநிலை பொது மேலாளா் செந்தில் இனியன், கரும்பு பொது மேலாளா்கள் தங்கராஜ், இளங்கோவன் மற்றும் 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் கரும்பு அரவை துவக்க விழாவில் கலந்து கொண்டு கரும்புகளை எடுத்து கரும்பு அரைக்கும் இயந்திரத்தில் போட்டனா்.

இதுகுறித்து ஆலை அதிகாரிகள் கூறுகையில், 2022-23 -ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் சுமாா் 6 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. விழாவில் கரூா், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள், சா்க்கரை ஆலையின் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT