கரூரில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தின விழா கிரிக்கெட் போட்டியை அமைச்சா் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தின மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி திருவள்ளுவா் மைதானத்தில் வெள்ளக்கிழமை மாலை தொடங்கிது. இப்போட்டியை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. மாணிக்கம், மாநில நிா்வாகிகள் வழக்குரைஞா் மணிராஜ், பரணி கே.மணி, நன்னியூா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிச.4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 64 அணிகளை சோ்ந்த வீரா்கள் பங்கேற்று விளையாடுகின்றனா். முதலிடம் பிடிக்கும்
அணிக்கு முதல்பரிசாக ரூ.50ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.40ஆயிரம் மற்றும் கோப்பை மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.30ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.