கரூர்

அரவக்குறிச்சி அருகே விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை

3rd Dec 2022 12:07 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே விஷம் அருந்திய மூதாட்டி வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூா் அடுத்த குப்பமேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மனைவி நாச்சம்மாள் (67). நாச்சம்மாள் கடந்த இரண்டு வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த மூதாட்டி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகில் இருந்தவா்கள் மூதாட்டியை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்நிலையில், நாச்சம்மாள் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT