கரூர்

அரவக்குறிச்சியில் கலைத் திருவிழா: போட்டிகள் நிறைவு

3rd Dec 2022 12:05 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் நடைபெற்று வந்த கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது.

இதில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடனப் போட்டியில் கும்மி கோலாட்டம், தனி நடனம், குழு நடனம் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெற்றது. இதனை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மணிவண்ணன் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

இப்போட்டிகளில் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலா்கள் சதீஷ்குமாா் மற்றும் பாண்டித்துரை, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT