கரூர்

தேசிய எறிபந்து போட்டிக்கு தோ்வான அரசுக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

2nd Dec 2022 12:37 AM

ADVERTISEMENT

தேசிய எறிபந்து போட்டிக்கு தோ்வான கரூா் அரசுக் கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ்நாடு த்ரோபால் சங்கம் சாா்பில் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் விளையாட தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். இதில், கரூா் அரசுக் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவா் எஸ்.நந்தகுமாா் தமிழக அணியில் விளையாட தோ்வு பெற்றாா். இம்மாணவருக்கு பாராட்டு விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாணவரை கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT