கரூர்

நொய்யல், மலைக்கோவிலூரில் நாளை மின்தடை

2nd Dec 2022 12:39 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், நொய்யல் மற்றும் மலைக்கோவிலூரில் சனிக்கிழமை (டிச.3) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக நொய்யல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், பூங்கோடை, உப்புபாளையம், அத்திப்பாளையம் புதூா், நத்தமேடு, காளிபாளையம், குளத்துப்பாளையம், இந்திராநகா் காலனியில் சனிக்கிழமை (டிச.3) மின்விநியோகம் இருக்காது.

இதேபோல், மலைக்கோவிலூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மலைக்கோவிலூா், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூா், செண்பகனம், பெரியகரியாம்பட்டி, சின்னகரியாம்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, வெங்கடாபுரம், நந்தனூா், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT