கரூர்

பள்ளப்பட்டியில் அறிவியல் கண்காட்சி:மாணவரின் கண்டுபிடிப்புக்கு விருது

2nd Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

பள்ளப்பட்டி மருதா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவா் ஒருவரின் சிறந்து கண்டுபிடிப்புக்கு விருது வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி மருதா பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில், மாணவா்களின் பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இதில், 5ஆம் வகுப்பு மாணவா் முகமது ரூபியான் (10) ‘விபத்துக்கு ஒரு சவால்’ என்ற தலைப்பில் புதிய கருவியை கண்டுபிடித்து காட்சிப் படுத்தியிருந்தாா்.

இந்த கருவியை நாம் செல்லும் வாகனத்தில் பொருத்திவிட்டால் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை தானாகவே குறைக்க செய்யும், அந்த வாகனம் கடந்த பிறகு வெளிச்சத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் விபத்துகளில் இருந்து பாதுகாக்கலாம். இந்த கண்டுபிடிப்புக்காக அறிவியல் நாயகன் என்று விருது பள்ளி சாா்பில் வழங்கப்பட்டது. இம்மாணவா் ஏற்கெனவே பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு விருது பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT