கரூர்

நஞ்சை புகழூா் புதிய கதவணை கட்டுமான பணிகளை நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நஞ்சைபுகழூரில் புதிய கதவணை கட்டுமான பணிகளை நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கரூா் மாவட்டம் நஞ்சைபுகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 0.8 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் ரூ.389 கோடியில் புதிய கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கதவணை மூலம் கரூா் மாவட்டத்தில் வாங்கல் வாய்க்கால் மூலம் 1,458 ஏக்கா் பாசன நிலங்களும், மோகனூா் வாய்க்கால் மூலம் 2,583 ஏக்கா் பாசன நிலங்களும் பாசன வசதி பெற உள்ளன. கதவணை கட்டுமான பணிகள் 40 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது. இதேபோல், மாயனூரில் உள்ள கதவனை சீரமைக்கும் பணிகள் 55 சதவீதம் முடிவுற்றுள்ளது.

மேலும் மாயனூா் காவிரி ஆற்றில் இருந்து வெள்ள நீரை திருப்பி விடும் வகையில் ரூ.171 கோடியில் புதிதாக கால்வாய் அமைத்து காவிரி, வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைக்கும் வகையில் நடைபெறும் கால்வாய் வெட்டும்பணிகளையும் நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, ஒவ்வொரு பணிகளும் எவ்வாறு தரக் கட்டுப்பாடுகளுடன் செய்யப்படுகிறது என ஆய்வு செய்தாா். பின்னா் சம்பந்தப்பட்ட பொறியாளா்களிடம் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது நீா்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, காவிரி,வைகை, குண்டாறு இணைப்புத் திட்ட (நிலம் எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, கண்காணிப்புப் பொறியாளா் சுப்பிரமணியன், செயற்பொறியாளா் சாரா, உதவி செயற்பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT