கரூர்

பள்ளபட்டி நகராட்சி கூட்டம் ரத்து

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பள்ளப்பட்டி நகராட்சி கூட்டம் போதிய உறுப்பினா்கள் வராததால் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.

பள்ளபட்டி நகராட்சியில் மொத்தம் 27 உறுப்பினா்கள் உள்ளனா். நகா்மன்ற தலைவராக உள்ள முனவா் ஜான், துணைத் தலைவா் பஷீா் அகமது ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளால் நகா்மன்றத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

கடந்த மூன்று முறை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் துணைத் தலைவா் பஷீா் அகமது கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை நடைபெற இருந்த நகா்மன்ற கூட்டத்துக்கு மொத்தம் 27 உறுப்பினா்களில் 9 போ் மட்டுமே கலந்து கொண்டதால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT