கரூர்

அரவக்குறிச்சியில் காவல்துறைகொடி அணிவகுப்பு

28th Aug 2022 05:53 AM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சியில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி இந்து அமைப்புகள் சாா்பில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. தொடா்ந்து விசா்ஜன ஊா்வலமும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் விநாயகா் சதுா்த்தி விழா, ஊா்வலத்தை எவ்வித பிரச்னையும் இன்றி நடத்தும் வகையில் காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனா். கரூா் மாவட்டத்திலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து பள்ளப்பட்டி ஷாநகா் பகுதியில் சனிக்கிழமை மாலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தொடங்கியது. கரூா் சாலை வழியாக அரவக்குறிச்சியின் முக்கிய வீதிகளில் சென்ற அணிவகுப்பு காவல் நிலையத்தில் முடிவடைந்தது.

அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், காவல் ஆய்வாளா் நாகராஜன், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோருடன், 300 காவலா்கள்

அணிவகுப்பில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT