மொடக்கூா் கிழக்கு ஊராட்சியில் விதவைப் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மொடக்கூா் கிழக்கு ஊராட்சியில் ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவா் பெரியசாமி, மருத்துவா் சாந்திகண்ணன், சக்திமெஸ் ராமச்சந்திரன், திப்பம்பட்டி எம்.என்.ராஜசேகா்
ஆகியோா் இணைந்து தையல் இயந்திரங்களை வழங்கினா். இந்நிகழ்வில் அரவக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி கலந்து கொண்டாா். மொடக்கூா் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.