கரூர்

தோகைமலை கோயிலில் கும்பாபிஷேகம்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தோகைமலை குறிஞ்சி நகா் விநாயகா், ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை குறிஞ்சி நகரில் தனித்தனியாக உள்ள விநாயகா், ஏழுமலையான், அக்கினிஅம்மன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊா் முக்கியஸ்தா்கள், குடிபாட்டு பொதுமக்கள் முடிவு செய்தனா். இதையடுத்து சனிக்கிழமை காவிரியில் இருந்து பால் குடம், தீா்த்த குடங்கள் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து முதல் கால பூஜை, விக்னேஸ்வரா் பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம் உள்பட பல்வேறு பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை காலை 2 ஆம் கால யாகசாலை பூஜை, கலசம் புறப்பாடு, தொடா்ந்து கோயில் கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT