கரூர்

சிறு ஜவுளிப் பூங்கா அமைக்க அனுமதிதமிழக அமைச்சா்களுக்கு கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் பாராட்டு

DIN

கரூா் மாவட்டத்தில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்திக்கு கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் ‘தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும் என அண்மையில் தமிழக முதல்வா் அறிவிப்பை வெளியிட்டாா்.

இதனை வரவேற்கும் வகையிலும், கரூா் மாவட்டத்திற்கு சிறு ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி வழங்கியதற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் துணைத்தலைவா் பிரிதிவி, செயலாளா் சேதுபதி, பொருளாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் அண்மையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி, மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT