கரூர்

ஊரகப் பகுதிகளை மேம்படுத்த ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கம்கரூா் ஆட்சியா் தலைமையில் ஆலோசனை

18th Aug 2022 11:55 PM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளை மேம்படுத்த ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கம் செயல்படுத்துவது தொடா்பாக ஆலோசனைக்கூட்டம் கரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். இதில், ஊரகப் பகுதிகளில் தூய்மையான சுற்றுச்சூழலை அடைவதற்கும், எழில்மிகு நிலையை நிலைநிறுத்துவதற்கும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் விதமாக ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற இயக்கத்தை செயல்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் பொதுமக்களின் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உருவாக்கிடவும், பொது சுகாதாரம், குழந்தை இறப்பு, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதால் ஊரகப் பகுதிகளில் தூய்மையான சுற்றுச்சூழலை அடைவதற்கும், எழில்மிகு நிலையை நிலைநிறுத்துவதற்கும், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற இயக்கம் வாயிலாக கிராமப்புற மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த இயக்கம் சனிக்கிழமை (20-ஆம்தேதி) முதல் அக்.1-ஆம்தேதி வரை ஊரகப் பகுதிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது இடங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் மாஸ் கிளீனிங் செய்தல், பள்ளி, கல்லூரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீா், சுகாதாரம் மற்றும் நீா் மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கிராமப்புறங்களில் தனிநபா் இல்லங்களில் சுகாதாரம் பேணுவது தொடா்பாக சுய உதவிக்குழுக்களை வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், ஊரகப் பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களைத் தவிா்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், சுத்தமான பசுமை கிராமங்களை உருவாக்குதல் போன்றவை ‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணா்வு பிரசாரத்தின் முக்கிய நோக்கம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக முகமை வளா்ச்சித் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், மகளிா் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அன்புமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT