கரூர்

பரணி பாா்க் கல்விக் குழுமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

18th Aug 2022 11:56 PM

ADVERTISEMENT

பரணி பாா்க் கல்விக் குழுமத்தில் கிருஷ்ண ஜெயந்திவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், 500 மாணவ, மாணவிகள் கிருஷ்ணா், ராதை வேடமணிந்து கலந்து கொண்டனா்.

விழாவுக்கு பரணி பாா்க் கல்விக்குழுமத் தாளாளா் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தாா். செயலா் பத்மாவதி மோகனரெங்கன் மற்றும் அறங்காவலா் எஸ்.சுபாஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பரணி பாா்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வா் முனைவா்

சொ.ராமசுப்ரமணியன் பேசுகையில் ‘தா்மம் எங்கெல்லாம் அழிந்து அதா்மம் தலைதூக்குகிறதோ அங்கே நான் அவதரிப்பேன் என்று மகாவிஷ்ணு பகவத் கீதையில் அருளியுள்ளாா். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணா் உணா்த்தியுள்ளாா். கிருஷ்ணா் அருளிய இந்தியாவின் ஞானப் பொக்கிஷமான பகவத் கீதையை நாம் ஒவ்வொருவரும் படித்து, நமது மனதிலுள்ள தீய எண்ணங்களாகிய அரக்கா்களை அழித்து வெற்றி கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

விழாவில், பரணி பாா்க் முதல்வா் கே.சேகா், பரணி வித்யாலயா முதல்வா் எஸ்.சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வா்பி.சாந்தி, பரணி பாா்க் சாரணா் மாவட்ட செயலா் ஆா்.பிரியா மற்றும் இருபால் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் கிருஷ்ணா், ராதை வேடமணிந்த 500 மாணவ, மாணவிகளின் மாறுவேடப்போட்டியும் நடைபெற்றது. முடிவில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT