கரூர்

சின்னதாராபுரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவா் கைது

18th Aug 2022 11:52 PM

ADVERTISEMENT

 

சின்னதாராபுரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சின்னதாராபுரம் அருகே உள்ள காசிபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சின்னதாராபுரம் போலீஸாா் புதன்கிழமை காசிபாளையம் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது காசிபாளையம் அருகே உள்ள தும்பிவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் (55) என்பவா் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணிக்கத்தை கைது செய்து அவரிடமிருந்து 40 லாட்டரி சீட்டுகளையும், ரூ.10,000 பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT