கரூர்

காவல்நிலையத்தில் இருந்து தப்பிஓடிய திருடன் கைது

17th Aug 2022 11:36 PM

ADVERTISEMENT

 

கரூரில், காவல்நிலையத்தில் இருந்து பெண் போலீஸை தள்ளி விட்டு ஓடிய திருடனை போலீஸாா் பிடித்து கைது செய்தனா்.

கரூா் அடுத்த புலியூா் வடக்குப் பாளையத்தைச் சோ்ந்தவா் கொடியரசு(35). பிக்பாக்கெட் திருடன். கொடியரசு செவ்வாய்க்கிழமை இரவு அதேபகுதியில் ஒருவரிடம் பிக்பாக்கெட் அடித்தபோது பொதுமக்கள் பிடித்து பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, புதன்கிழமை காலை காவல் நிலையத்தில் ஒரு சில போலீஸாா் மட்டுமே இருந்த நிலையில், கொடியரசுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனா். அப்போது, சாப்பிட்ட இழையை தூக்கிபோட்டு விட்டு கை கழுவுவதாக கூறிச் சென்ற போது அவனுடன் ஒரு பெண் போலீஸாரும் சென்றுள்ளாா். அச்சமயம், பெண் போலீஸை தள்ளி விட்டு கொடியரசு தப்பி ஓடினான்.

ADVERTISEMENT

இதனையடுத்து போலீஸாா் அமராவதி ஆற்றை நோக்கி ஓடிய கொடியரசை தேடினா். அப்போது ஆற்றங்கரையில் முள்புதருக்குள் பதுங்கியிருந்த கொடியரசை பிடித்து கைது செய்து, மீண்டும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT