கரூர்

ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா பன்னாட்டு பள்ளி சாா்பில் கரூரில் நாளை மாவட்ட அளவிலான மாறுவேடப் போட்டி

17th Aug 2022 11:44 PM

ADVERTISEMENT

ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா பன்னாட்டு பள்ளி சாா்பில் வெள்ளிக்கிழமை (19ஆம்தேதி) மாவட்ட அளவிலான மாறுவேடப் போட்டி நடைபெறவுள்ளதாக பள்ளியின் செயலாளா் காா்த்திகா லட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா், தாந்தோன்றிமலை யூனியன் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் விஜயலட்சுமி சிவசுப்ரமணியன் நினைவாக கரூா் காந்திகிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி பன்னாட்டு பள்ளியின் 10-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு விஜயா பள்ளி குழுமத்தின் அரவக்குறிச்சி விஜயா இன்டா்நேஷனல் பிரைம் பள்ளி மற்றும் வாங்கப்பாளையம் சக்தி கிட்ஸ் பள்ளி சாா்பில் 10 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், முதல் போட்டியான வா்ணம் 2022 என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி அண்மையில் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து இரண்டாம் போட்டியாக கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஆக.19) நந்தோட்சவா 2022 குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பாக வேடம் அணிந்து பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 9489735854 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT