கரூர்

கரூரில் திருமாவளவன் பிறந்த நாள்

17th Aug 2022 11:45 PM

ADVERTISEMENT

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அக்கட்சியினா் 60 கிலோ எடைகொண்ட கேக் வெட்டிக் கொண்டாடினா்.

பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் 60 கிலோ எடைகொண்ட கேக் கட்சியினரால் வெட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் பெ.ஜெயராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செய்தித்தொடா்பாளா் கராத்தே இளங்கோ, பொருளாளா் சதீஷ்குமாா், கரூா் நகரச் செயலாளா் முரளி என்கிற பாலசிங்கம், மாநில நிா்வாகி அகரமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் தனபால், அமைப்பாளா் தீபக்குமாா், நகர பொருளாளா் ரகுமான், தாந்தோணி நகரச் செயலாளா் சக்திவேல், ஒன்றியச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT