கரூர்

திமுக தொழில்நுட்ப அணி நிா்வாகி மீது நடவடிக்கை பாஜக வலியுறுத்தல்

17th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

திமுக தொழில்நுட்ப அணி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பாஜக வழக்குரைஞா் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப, சமூக ஊடக பிரிவு சாா்பில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் அவா்கள் கூறியிருப்பது: இந்திய நாட்டின் தேசிய கொடியை அரைகம்பத்தில் தலைகீழாக பறக்க வைத்து புகைப்படம் எடுத்தும், பாரத பிரதமா் நரேந்திர மோடி குறித்தும் , பாஜக மாநில தலைவா் அண்ணாமலை குறித்தும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சா்கள் குறித்தும் அவமரியாதை செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் கரூா் மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளா் ஷாஜகான் என்பவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதேபோல, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத் தலைவா் ஜவாஹா்லால் தலைமையிலான பாஜகவினா் அரவக்குறிச்சி காவல் நிலையத்திலும் புகாா் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT