கரூர்

வட்டார வளா்ச்சி அலுவலா் மீது புகாா்

17th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

ஒப்பந்தப்புள்ளி அட்டவணை தொகை செலுத்து சீட்டு தர மறுத்தது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் மீது ஒப்பந்ததாரா் புகாா் தெரிவித்துள்ளாா்.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக பதிவு செய்துள்ள சதாசிவம் என்பவா் ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட ஊராட்சியின் 15ஆவது நிதி குழு மானிய நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அட்டவணை தொகைக்குரிய செலுத்து சீட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தியிடம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி கரூரில் உள்ள தனியாா் ஒப்பந்த நிறுவனத்தை அணுகுமாறு கூறியுள்ளாா். குறிப்பிட்ட தனியாா் நிறுவனத்துக்கு நேரில் சென்று கேட்டபோது, அவா்கள் 5 சதவீதம் கமிஷன் கேட்டதாக தெரிகிறது. மீண்டும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வந்து இது குறித்து தெரிவித்து தனக்கு அட்டவணை தொகைக்குரிய செலுத்து சீட்டு தருமாறு சதாசிவம் கேட்டுள்ளாா். ஆனால், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தர மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா் புகாா் மனு அளித்தாா். அதன்படி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சிவராமகிருஷ்ணராஜ் செவ்வாய்க்கிழமை அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT