கரூர்

கரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ்.அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் இரா.கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். செய்தித் தொடா்பாளா் கண்ணையன், இளைஞரணிச் செயலாளா் விஜித், நகரச் செயலாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஜாதிவாரியாக கணக்கெடுத்த பின் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளா் குழந்தைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT