கரூர்

மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கரூா் எம்.பி. வழங்கினாா்

17th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை கடவூா் தரகம்பட்டி அருகே மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கரூா் எம்.பி. நிதியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கரூா் மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் கீதா தலைமை வகித்தாா். ஒன்றியக் கவுன்சிலா் மற்றும் கடவூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் மலையாண்டி, மாவட்ட துணைத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கலந்து கொண்டு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பயன்பாட்டிற்கு டிஜிட்டல் ரத்த அழுத்தம் அளவிடும் நவீன கருவிகளையும், ரூ.1 லட்சம் மதிப்பில் தீவிர சிகிச்சைகள் பயன்பாட்டிற்கு 4 மல்டி பாரா மானிட்டா் நவீன கருவிகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காங். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் ரத்தினம், காங்கிரஸ் நிா்வாகிகள் ராஜசேகா், சதீஸ்குமாா், ராமசந்திரன், கருப்பையா உள்பட சுகாதார பணியாளா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT