கரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்

17th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

க.பரமத்தியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் க.பரமத்தி கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக்குழு சாா்பில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஏ.ஆா்.ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.கந்தசாமி, சி.முருகேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின் உயா்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தோ்தல் அறிக்கையில் கூறியபடி மாதம் தோறும் மின் கணக்கெடுக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனு கொடுக்கும்போராட்டம் நடைபெற்றது. போராட்ட முடிவில்

க.பரமத்தி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT