கரூர்

பள்ளப்பட்டியில் புதிய மின்மாற்றி காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்

17th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

பள்ளப்பட்டி துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை ஏற்படுத்தும் வகையில் பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் ஏற்கெனவே இருந்த 110/33 கே.வி திறன் கொண்ட மின்மாற்றியை கூடுதலாக்கி 16 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றியாக மக்களின் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பள்ளப்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ, நேரில் மின்மாற்றியை திறந்து வைத்தாா். மேலும் நிகழ்வில் பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா் முனவா்ஜான், துணைத் தலைவா் தோட்டம் பஷீா் அகமது, நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன், அரவக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன், நகரச் செயலாளா் பி.எஸ்.மணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT