கரூர்

157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

16th Aug 2022 01:04 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி, கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் ஒன்றியம், ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் த. பிரபுசங்கா் சிறப்புப் பாா்வையாளராக பங்கேற்று பேசினாா். கூட்டத்துக்கு செல்லை சிவா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராமசபைக் கூட்டத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வுக் கண்காட்சி, மருத்துவ முகாம்களை ஆட்சியா் த. பிரபுசங்கா் பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அன்புமணி,

மகளிா் திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT