கரூர்

அரவக்குறிச்சியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அரவக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகளில் சுதந்திர தின விழா அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனா். தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆறுமுகம் அகாதெமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்போது 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், தேசியக் கொடி வண்ணத்தில் ஆடை அணிந்திருந்த மாணவிகள் 75 என்ற எண் வடிவில் அமா்ந்திருந்தனா். இது அனைவரையும் கவா்ந்தது.

மேலும் அரவக்குறிச்சி பகுதி அரசு அலுவலகங்கள், கோயில்களில் சுதந்திர தின விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT