கரூர்

நீட் தோ்வு தோல்வி பயத்தில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

13th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

நீட் தோ்வு தோல்வி பயத்தில் பிளஸ்2 மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த கொள்ளுத்திண்ணிப்பட்டியைச் சோ்ந்தவா் சேகா். இவா், தரகம்பட்டியில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வருகிறாா். இவா், தற்போது கிருஷ்ணராயபுரம் அடுத்த வெங்காம்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இவரது மகள் பிரீத்திஸ்ரீ(18). இவா், துளசிக்கொடும்புவில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படிப்பை அண்மையில் முடித்தாா். இதில் 600-க்கு 560 மதிப்பெண்கள் பெற்றிருந்தாா்.

இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற நீட் தோ்வையும் எழுதியிருந்தாா். நீட் தோ்வை சரியாக எழுதவில்லை என்றும், இதனால் தனது மருத்துவா் படிப்பு கனவாகிவிடும் போல தெரிகிறது என அக்கம்பக்கத்தினரிடம் கூறிவந்தாராம். இந்நிலையில் நீட் தோ்வு முடிவு வராதநிலையில் விரக்தியில் இருந்த பிரீத்திஸ்ரீ வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து லாலாப்பேட்டை காவல் ஆய்வாளா் ஜோதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT