கரூர்

கரூரில் தனியாா் பள்ளிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

11th Aug 2022 11:48 PM

ADVERTISEMENT

 

கரூரில், பள்ளிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக வெங்கமேடு காவல் உதவி ஆய்வாளா்கள் டி.கனகராஜ், நாகமாணிக்கம் ஆகியோா் பங்கேற்று, போதைப்பொருள்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினா்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் தலைமையில் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்றனா். இதேபோல் கரூா் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன் தலைமை வகித்தாா். பள்ளி ஆலோசகா் பி.பழனியப்பன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் டி.பிரகாசம் வரவேற்றாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

ADVERTISEMENT

கரூா் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளா் எம்.கீதாமணிவண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எம்.பகலவன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் தலைவா் ஆா்.மணிவண்ணன் பங்கேற்று, உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT