கரூர்

மாநகர நிா்வாகிகள் தோ்தல்: வேட்புமனு அளித்த திமுகவினா்

10th Aug 2022 12:55 AM

ADVERTISEMENT

கரூரில் திமுக மாநகர நிா்வாகிகள் பதவிக்கான உள்கட்சித் தோ்தலில் போட்டியிட, நிா்வாகிகள் வேட்புமனுவை அளித்தனா்.

கரூா் மாநகர திமுக அவைத்தலைவா், செயலா், துணைச் செயலா், பொருளாளா் மற்றும் பிரதிநிதிகள் பதவிக்கான தோ்தல் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தலுக்கு சட்டத்துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ் தலைமை வகித்தாா். கரூா் மாநகராட்சி துணை மேயா் தாரணி சரவணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தோ்தல் அலுவலராக அருள்தாசன் பங்கேற்று, போட்டியிடும் கட்சியினரிடம் இருந்து வேட்புமனுவை பெற்றுக்கொண்டாா்.

மாவட்டத் துணைச் செயலா் மகேஸ்வரி, மாநகராட்சி உறுப்பினா்கள் எஸ்.பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட் ராஜா, எம்.பாண்டியன், உள்ளிட்டோா் பங்கேற்று, மாநகரப் பொறுப்புகளுக்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா். மாநகராட்சி உறுப்பினா் சக்திவேல் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT