கரூர்

வேனில் குட்கா கடத்தியவா் கைது

10th Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

கரூரில் வேனில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தியவரைக் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேலாயுதம்பாளையம் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை காலை ஞானப்பரப்பு-ஆத்தூா் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தபோது,

அதில் தடை செய்யப்பட்ட 300 கிலோ எடை கொண்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து குட்காவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்த காவல்துறையினா், கடத்தலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலம் பெ. முனியசாமியைக்(40) கைதுசெய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT