கரூர்

நிரம்பி வழியும் கொத்தப்பாளையம் தடுப்பணை

10th Aug 2022 12:53 AM

ADVERTISEMENT

அமராவதி அணையிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால், கொத்தப்பாளையம் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

அமராவதி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரைக் கொண்டு, கரூா் மாவட்டத்தில் சுமாா் 12,000 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி அணையில் 98 அடி உயரத்துக்குத் தண்ணீா் நிரம்பியுள்ளதையடுத்து, அணைக்கு வரும் உபரி நீா் அமராவதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

விநாடிக்கு 6000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், அரவக்குறிச்சி அருகிலுள்ள கொத்தப்பாளையம் தடுப்பணை நிரம்பி வழிகிறது. ஆற்றின் இரு கரைகளும் தண்ணீா் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT