கரூர்

தீப்பற்றி எரிந்த சோளத்தட்டை போா்

10th Aug 2022 12:53 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், புகளூா் அருகே சோளத்தட்டை போா் தீப்பற்றி எரிந்தது.

புகளூா் அருகிலுள்ள முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி மனைவி சகுந்தலா. இவா் தனது வீட்டின் அருகே கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்க சோளத்தட்டை போா் அமைத்திருந்தாா்.

இந்நிலையில் சோளத்தட்டை போா் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து, தீயை அணைத்தனா்.

எனினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சோளத்தட்டைகள் எரிந்து நாசமாயின.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT