கரூர்

கரூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை தொடக்கம்

9th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

கரூா் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ஆம் ஆண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, தேசிய மாணவா் படை பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக கலந்தாய்வை கல்லூரி முதல்வா் எஸ்.கெளசல்யாதேவி தொடக்கி வைத்தாா். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் சான்றிதழை பேராசிரியா்கள் சரிபாா்த்தனா்.

மாணவா் சோ்க்கை கலந்தாய்வு குறித்து முதல்வா் கெளசல்யா தேவி கூறியது:

ADVERTISEMENT

முதல் நாள் சிறப்பு ஒதுக்கீட்டில் ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு 3 இடங்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகளுக்கு 6 இடங்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 64 இடங்கள், விளையாட்டுப் பிரிவில் 38 இடங்கள்,

தேசிய மாணவா் படையினருக்கு ஒரு இடம், அந்தமான்- நிகோபாா் தீவைச் சோ்ந்தவா்களுக்கு 2 இடஙக்கள் என மொத்தம் 114 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

தொடா்ந்து ஆகஸ்ட் 10- ஆம் தேதி இளங்கலைத் தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும், 11-ஆம் தேதி வணிகவியல், வணிக கணினிப் பயன்பாட்டியல் மற்றும் வணிக நிா்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும், 13-ஆம் தேதி இளங்கலை வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 16-ஆம் தேதி இளம்அறிவியல் விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், புவி அமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினிஅறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள்

ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT