கரூர்

போரில் உயிா்நீத்த குடும்பத்தினருக்கு பிரதமா் கையொப்பமிட்ட கேடயம் வழங்கல்

9th Aug 2022 01:26 AM

ADVERTISEMENT

ராணுவத்தில் பணியாற்றி போரின் போது உயிா்நீத்த இரு வீரா்களின் குடும்பத்தினருக்கு, பிரதமா் மோடி கையொப்பமிட்ட நினைவுக் கேடயம் ராணுவ அலுவலா்களால் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

1971-ல் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போரில் கரூா் தொழிற்பேட்டையைச் சோ்ந்த ராணுவ வீரா் மகாமுனியும், 1997-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற சண்டையில் தாந்தோனிமலையைச் சோ்ந்த ராணுவ வீரா் ராமசாமியும் வீரமரணமடைந்தனா்.

இந்த இருவீரா்களின் குடும்பத்தினருக்கும் பிரதமா் மோடியின் கையொப்பமிட்ட நினைவுக் கேடயங்கள் வழங்கும் நிகழ்வு, கரூரை அடுத்த காக்காவாடிதனியாா் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாமுனி மனைவி லட்சுமி, ராமசாமி மனைவி விமலா ஆகியோரிடம் பிரதமா் மோடி கையொப்பமிட்டு வழங்கிய நினைவுக் கேடயங்களை லெப்ஃடினன்ட் சிவா வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் பள்ளியின் என்சிசி 2-வது கவசப் படை வட்டாரத் தளபதி கா்னல் சஞ்சீவ் திவான், ஹவில்தாா் மேஜா் சு.முனுசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

பள்ளியின் தேசியப்படை மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT