கரூர்

கரூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முறைசாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. முருகேசன், சுமைத் தூக்கும் தொழிலாளா்கள் சங்கத்தின் ராஜா முகமது, மாநகராட்சி உறுப்பினா் தண்டபாணி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பேசினா். ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT