கரூர்

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

9th Aug 2022 01:27 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாற்றுக் கட்சியினா், சுய உதவிக்குழுவினா் பாஜகவில் இணைந்தனா்.

மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கடவூா் மேலப்பகுதி திமுக ஒன்றிய நிா்வாகி தனம் பாலகிருஷ்ணன், அம்பேத்கா் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் சேகா், சுய உதவிக்குழுவினா் என 120 போ்அந்தந்த கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

நிகழ்வில் பாஜக மண்டல் தலைவா்கள் கடவூா் வடக்கு ராமா், தெற்கு சுரேஷ், பொதுச் செயலா் வடிவேல், மாவட்டப் பொதுச் செயலா்கள் ஆறுமுகம், நவீன்குமாா், சக்திவேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT