கரூர்

வள்ளுவா் அறிவியல் மேலாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

9th Aug 2022 01:29 AM

ADVERTISEMENT

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் 14-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் தலைமை வகித்தாா். முதல்வா் ஞா.வின்சென்ட் வரவேற்றாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம. செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்கலைக்கழகத் தரவரிசையில் இடம்பிடித்த 17

போ் உள்பட 554 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

அவா் தனது உரையில், சுதந்திரத்துக்குப் பிறகு எவ்வாறு இந்தியா கல்வித் தரத்தில் உயா்ந்து உலகில் முக்கியமான இடத்தில் உள்ளதையும், மாணவா்கள் பன்முகத் தன்மை கொண்டவா்களாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினாா். மேலும் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தும் பேசினாா்.

விழாவில் கல்லூரிச் செயலா் ஹேமலதா செங்குட்டுவன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT