கரூர்

குடிநீா் விநியோகப் பணியாளா்களுக்கு சலுகைகளை வழங்க வலியுறுத்தல்

9th Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

கரூா் மாநகராட்சியின் குடிநீா் விநியோகப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரனை மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க நிா்வாகிகள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், மாநகராட்சி உறுப்பினா் தண்டபாணி ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பது:

கரூா் மாநகராட்சியில் குடிநீா் விநியோகப் பணியில் சுமாா் 50 போ், கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் ரூ.7300 ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

இவா்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக்குறைவாக உள்ளது. மேலும் இந்த தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை இல்லை, வருகைப்பதிவேடும் பராமரிக்கப்படுவதில்லை.

எனவே தொழிலாளா் சட்டங்களின்படி, இவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் ஈட்டுறுதித் திட்டம் அமலாக்கப்பட வேண்டும்.

ஆட்சியரால் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT