கரூர்

கீழே கிடந்த பணத்தைஉரியவரிடம் ஒப்படைத்ததொழிலாளிக்கு பாராட்டு

8th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சியில் கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தொழிலாளியை பலரும் பாராட்டினா்.

அரவக்குறிச்சி வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாபு. கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை அருகில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றாா். அப்போது வங்கியின் முன்பு ரூ.3,000 பணம் சிதறி கிடந்துள்ளது. இதைகண்ட பாபு, பணத்தை எடுத்து வங்கி மேலாளா் அரவிந்த்சாமியிடம் ஒப்படைத்தாா். அப்போது அங்கு வந்த மதி என்பவா் தனது பணம் வங்கியில் காணாமல் போனதாக மேலாளரிடம் தெரிவித்தாா். இதையடுத்து வங்கி மேலாளா் அரவிந்த்சாமி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வங்கியின் முன்பு பணம் விழுந்தது தெரியவந்தது. பின்னா் அரவக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் காவலா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலையில் அந்த பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூலித் தொழிலாளியின் இச்செயலை பலரும் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT