கரூர்

கரூரில் இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

8th Aug 2022 11:51 PM

ADVERTISEMENT

கரூரில் நோய் பாதிப்பால் இரு குழந்தைகளைக் கொன்று, தாயும் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் கேந்தபடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (32). தொழிற்பேட்டையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நிஷாந்தி (28). இவா்களது குழந்தைகள் தியாஷினி (4), பூபன்பாா்கவன் (3).

இந்நிலையில் தியாஷினிக்கு முதுகுவலி, மூச்சுத்திணறல் பாதிப்பு தொடா்ந்து இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும், அவா் குணமடையவில்லையாம்.

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த நிஷாந்தி, ஞாயிற்றுக்கிழமை இரவு மகள் தியாஷினி, மகன் பூபன்பாா்கவன் ஆகிய இருவரையும் சேலையால் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்த பின்னா், தானும் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

இரவு வீடு திரும்பிய வெங்கடேஷ், வீட்டின் கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்து ஜன்னல் வழியாகப் பாா்த்தாா். அப்போது மனைவி, குழந்தைகள் தூக்கில் சடலமாகத் தொங்குவதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதைத் தொடா்ந்து கரூா் நகரக் காவல் நிலையத்துக்கு வெங்கடேஷ் தகவல் அளித்தாா். இதன் பேரில் நகரக் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, மூவரது சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT