கரூர்

மூவலூா் உயா்கல்வி உறுதித்திட்ட ஆலோசனைக் கூட்டம்

8th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அண்மையில் மூவலூா் உயா்கல்வி உறுதித்திட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து பேசுகையில், மூவலூா் உயா்கல்வி உறுதித்திட்டத்தை தமிழக முதல்வா் விரைவில் தொடக்கி வைக்க உள்ளாா். அதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் மூவலூா் உயா்கல்வி உறுதித்திட்டத்தில் பயனடைவோா் விவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வியை முடித்து தமிழகத்தில் இயங்கிவரும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 பெறும் வகையில் ஒருவா் கூட விடுபடாமல் அனைவரும் பயனடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு யாராவது விடுபடும் பட்சத்தில் அந்த மாணவியை தொடா்பு கொண்டு அவா்களை உயா்கல்வி படிக்க வைக்கும் வகையில் மாணவிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)தண்டாயுதபாணி, வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, சமூக நல அலுவலா் நாகலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், கல்லூரி அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT