கரூர்

புகளூா், தாளப்பட்டியில்இன்று மின் தடை

8th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

 

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூா் மாவட்டத்தின் புகளூா், தாளப்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கரூா் மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் புகளூா் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான நொய்யல், சேமங்கி, நடையனூா், தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், புஞ்சைபுகளூா் மற்றும் புகளுா் ஆகிய பகுதிகளிலும்,

தாளப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான தும்பிவாடி, தாதம்பாளையம், பள்ளபாளையம், கருப்பம்பாளையம், மணல்மேடு, காக்காவாடி, வையம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எஸ்.ஜி.புதூா், ஆறு ரோடு, கரூா் ஜவுளி பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT