கரூர்

வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு கண்காணிப்புக் குழுக் கூட்டம்

DIN

கரூரில், வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பட்டியல் இனத்தவா் மற்றும் பட்டியல் இன பழங்குடியினா் மக்கள் வன்கொடுமையால் பாதிக்கப்படும்போது காவல்துறை பரிந்துரையின்படி பாதிப்பின் தன்மைக்கேற்ப வன்கொடுமை தீருதவித் தொகை வழங்கப்படுவது குறித்தும், 2022-2023 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட தீருதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்ட விவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தாஜூதீன், வருவாய் கோட்டாட்சியா்கள் புஷ்பாதேவி (குளித்தலை), ரூபினா(கரூா்), அரசு சிறப்பு வழக்குரைஞா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT