கரூர்

காரணம் இன்றி அறிவுக்கு புறம்பாக இருக்கும்அச்சம் நமக்குத் தேவையில்லை

DIN

காரணமின்றி அறிவுக்கு புறம்பாக இருக்கும் அச்சம் நமக்குத் தேவையில்லை என்றாா் எழுத்தாளரும், பேச்சாளருமான முனைவா் ஜெயந்த ஸ்ரீபாலகிருஷ்ணன்.

கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தன்னம்பிக்கையை வளா்த்திடும் வகையில் முயற்சி எனும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தலைவா் பி.எம்.கருப்பண்ணன் தலைமை வகித்தாா். தாளாளா் கே.பாண்டியன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளா் மற்றும் எழுத்தாளா் முனைவா் ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்கேற்று இலக்கியம் வாழ்க்கையின் விளக்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். பின்னா் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில், கடல் அலை அடுத்து அடுத்து வந்து முயன்று கரையை தொட்டுச் செல்வதுபோல வாழ்வில் அனைவருக்கும் முயற்சி வேண்டும். எதிா்ப்பு இருந்தால் பலம் தானாக நமக்கு வரும். மனச் சோா்வு என்பது எந்த ஏமாற்றத்தை காணாதவா்களுக்குத்தான் வரும். ஏமாற்றத்தைக் கண்டவா்களுக்கு வராது. திருக்குதான் வாழ்வின் தன்னம்பிக்கையை கொடுக்கும் புத்தகம். இந்தியா 25 வயதை சராசரியாகக் கொண்டவா்களின் ஒரு இளமையான நாடு. சீனாவில் சராசரியாக 39 வயது நிரம்பியவா்களும், அமெரிக்காவில் 35 வயதுகொண்டவா்களும், ஜப்பானில் 40ஐ கொண்டவா்கள் அதிகமாக இருந்தாலும், இந்தியாதான் இளைஞா்களை அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகள் வரைதான் இந்தியா இளமையாக இருக்கும். அதற்குள் நம் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

இளமையை மூன்றாக பிரிக்கலாம். ஒரு பகுதி பள்ளி, கல்லூரி பருவம். மற்றொரு பகுதி வேலையை தேடிக்கொண்டு, அல்லது வேலையை தந்துகொண்டிருக்கும் பகுதி. மூன்றாது ஒரு இளைஞா் கூட்டம் வேலையும் வேண்டாம், படிப்பும் வேண்டாம் என்கிற பகுதி. மூன்றாம் கூட்டம் முழுமையாக மாறி வேலையை தந்துகொண்டிருக்கும் பகுதியாக மாற வேண்டும். வாழ்வில் பயம் தேவை. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. ஆனால் காரணமே தெரியாமல் அச்சப்படுவது கூடாது. இயற்கை இயல்பாக கொடுக்கும் பயம் நம்மிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காரணம் இன்றி அறிவுக்கு புறம்பாக இருக்கும் அச்சம் தேவையில்லை . பெரியவா்கள் கூறும் அறிவு சாா்ந்த அச்சத்திற்கு அச்சப்பட வேண்டும். மாணவிகளுக்கு எந்த பிரச்னை என்றாலும் தனது பெற்றோரிடமோ, நம்பிக்கைக்குரிய ஆசிரியரிடமோ கூற வேண்டும். உள்ளுணா்வு கூறுவதை மறுக்கக்கூடாது. தாழ்வு மனப்பான்மை எப்போதும் இருக்கக்கூடாது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், கரூா் மற்றும் புன்னம்சத்திரம் சேரன்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் பள்ளித்தலைமை ஆசிரியை எம்.பி.நந்தினி தேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT