கரூர்

கரூரில் ஆக. 19-இல் புத்தகத் திருவிழா அமைச்சா் தகவல்

6th Aug 2022 11:45 PM

ADVERTISEMENT

 

கரூரில், 2 லட்சம் போ் பங்கேற்கும் வகையில் புத்தகத் திருவிழா ஆக. 19ஆம்தேதி தொடங்க உள்ளது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூரில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதையடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் பேசுகையில், கரூா் மாவட்டத்தின் வரலாற்றில் முதல்முறையாக அரசு நிதிகளைக் கொண்டு மிகப்பெரிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா ஆக. 19-ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை 11 நாள்கள் திருமாநிலையூா் திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

இதில், திண்டுக்கல் லியோனி, சுகிசிவம், சாலமன்பாப்பையா போன்ற சான்றோா்கள், பெரியோா்கள் பங்கு பெற்று சிறப்பிக்க இருக்கிறாா்கள்.

ADVERTISEMENT

மேலும், ஆயிரம் போ் அமரும் வகையில் அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் 2 லட்சம் போ் பங்கு பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதைவிட கூடுதலாக கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், தினமும் பள்ளி, கல்லூரி மாணவி, மாணவிகள் பங்கேற்கும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகத் திருவிழா சிறப்பாக அமைய மாவட்ட பொதுமக்கள், பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் வாசகா் வட்டத்தை சோ்ந்தவா்கள் மற்றும் புத்தகப் பிரியா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் எம். லியாகத், கவிதா(நிலமெடுப்பு), வருவாய் கோட்டாட்சியா்கள் க. புஷ்பா தேவி, ரூபினா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT