கரூர்

குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

30th Apr 2022 11:30 PM

ADVERTISEMENT

 

 கரூரில், குடும்பத்தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா், பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் வெற்றிவேல். கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலைப்பாா்த்து வருகிறாா். இவரது மனைவி உத்ரியாஜூலி(34). கணவன், மனைவி இடையே அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவும் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த உத்ரியாஜூலி விஷம் குடித்தாா். மயங்கிக்கிடந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT