கரூர்

உயிரிழந்தவரின் முதியவரின் சடலம் 20 நாள்களுக்குப் பிறகுஅடையாளம் கண்டுபிடிப்பு

29th Apr 2022 03:59 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே உயிரிழந்த தந்தை சடலத்தை 20 நாள்களுக்குப் பிறகு மகன் அடையாளம் காட்டினாா்.

அரவக்குறிச்சி தாலுகா தொக்குப்பட்டிபுதூரை அடுத்த பொன்னாவரம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டான் என்ற சடையப்பன். இவா், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். இந்நிலையில் வடுகநாம்பள்ளி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20 நாள்களுக்கு முன்பு சடையப்பன் வடகநாம்பள்ளி சென்றாா். அங்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சாமியாத்தாள் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் இவரைப் பற்றிய தகவல் தெரியாததால் கடந்த 20 நாள்களாக விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் அவரது சட்டைப்பையில் இருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டனா். அதன்பிறகுதான் உயிரிழந்தவரின் மகன் கைப்பேசி எண் எனத் தெரியவந்தது. இதையடுத்து முருகன் வடகநாம்பள்ளி சென்று முதியவரின் உடலை அடையாளம் காட்டினாா். மேலும் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT