கரூர்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா

23rd Apr 2022 11:43 PM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி கிளை நூலகம் சாா்பில் நடைபெற்ற உலக புத்தக தினவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.

அரவக்குறிச்சி கிளை நூலகத்தின் சாா்பில் ஆா்.சி. பள்ளியில் உலக புத்தக தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் குறித்து பேச்சுப் போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில், சிறப்பு விருந்தினராக ஜி.டி.என். கலை கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியா் பி.முருகானந்தம் கலந்து கொண்டாா். மேலும், அவா் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வாசிப்பது தொடா்பான விளக்க உரையை எடுத்துக் கூறினாா்.

ADVERTISEMENT

அரவக்குறிச்சி கிளை நூலகா் த.செந்தில்குமாா் நன்றி கூறினாா். நிகழ்வில், ஆசிரியா்கள் தோமையம்மாள், சாா்லஸ், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT