கரூர்

கரூரில் தொடா்ந்து 6 மணி நேரம்

17th Apr 2022 12:49 AM

ADVERTISEMENT

 

கரூரில் தொடா்ந்து 6 மணி நேரம் ஆன்மிக பாடல் பாடி சாதனை படைத்தனா் கரூா் ஸ்ரீ கவி இசையாலயம் குழுவினா்.

கரூா் ஸ்ரீ கவி இசையாலயம், ஆன்மிக மன்றம் சாா்பில் தொடா்ந்து 6 மணி நேரம் ஆன்மிக பாடல் பாடி சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு வரை நடைபெற்றது. இதில், ஸ்ரீ கவி இசையாலயம் நிறுவனா் பூரணி முரளிதரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று, இடைவிடாது ஆன்மிகபாடல் பாடி ஜெட்லி புக்ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனா். இதற்கு முன் உத்தரபிரதேசத்தில் தொடா்ந்து 5 மணி நேரம் பாடியதே சாதனையாக இருந்தது. தொடா்ந்து சாதனை நிகழ்த்தியவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு ஆன்மிக மன்றத் தலைவா் எம்.ஏ. ஸ்காட் தங்கவேல் தலைமை வகித்தாா். முன்னதாக நிகழ்ச்சியை கரூா் வைஸ்யா வங்கி இயக்குநா் சுதா சூா்ய நாராயணா, சென்னை மண்டல இணை ஆணையா் எஸ்.சூா்யபிரகாஷ், டாக்டா் ராஜேஸ்வரி சூரியபிரகாஷ் உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியை திருக்கு பேரவை செயலாளா் மேலை பழனியப்பன் தொகுத்து வழங்கினாா். இதில், கரூா் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிா் கலை அறிவியல் கல்லூரி செயலாளா் யத்தீஸ்வரி நீலகண்ட பிரியா அம்பா, ஸ்ரீசத்ரு சம்ஹார மூா்த்தி திருக்கோயில் குரு முதல்வா் ஓம்சக்தி அருணாசலம் , ஸ்ரீ கல்யாண காளீஸ்வரி மடாலய மடாதிபதி டாக்டா் வெற்றிக்கனி காளிதாஸ் சுவாமிகள், கருவூா் பசுபதி மடாலய மடாதிபதி ஸ்ரீ பால முருகனாா் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT